முக்கியமான பிரச்னைகள் பற்றி பேசாமல் மவுனம் ஏன்?: கார்கே கேள்வி
முக்கியமான பிரச்னைகள் பற்றி பேசாமல் மவுனம் ஏன்?: கார்கே கேள்வி
UPDATED : ஜூன் 24, 2024 02:54 PM
ADDED : ஜூன் 24, 2024 12:22 PM

புதுடில்லி: 'முக்கியமான பிரச்னைகள் குறித்து பேசாமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
மவுனம் ஏன்?: கார்கே கேள்வி
இது குறித்து கார்கே எக்ஸ் சமூகவலைளத்தில் கார்கே வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: முக்கியமான பிரச்னைகள் குறித்து இன்று பிரதமர் மோடி ஏதாவது பேசுவார் என்று நாடு எதிர்பார்த்தது. ஆனால் பேசாமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?.
வன்முறை
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த ரயில் விபத்து குறித்தும், 13 மாதங்களாக மணிப்பூரில் நடக்கும் வன்முறை குறித்தும் பேசாமல் பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார். அவரது இன்றைய உரையில் சமீபத்திய வன்முறை பற்றி எந்த கவலையும் தெரிவிக்கவில்லை. ஜாதி மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் மோடி முற்றிலும் அமைதியாக இருந்து வருகிறார்.
எதிர்க்கட்சிகளுக்கு மோடி அறிவுரை கூறுகிறார். கடந்த 10 வருடங்களாக பொதுமக்களால் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டு, 50 ஆண்டு கால எமர்ஜென்சியை நினைவூட்டுகிறார்கள். மக்கள் பிரதமர் மோடிக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். இருந்த போதிலும், அவர் பிரதமராகி விட்டதால் உழைக்க வேண்டும்.
நாங்கள் தொடர்ந்து சபையிலும், தெருக்களிலும், அனைவரின் முன்னிலையிலும் மக்களின் குரலை எழுப்புவோம். அரசியலமைப்பை பாதுகாப்போம். வாழ்க ஜனநாயகம். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.