ADDED : ஜூலை 05, 2025 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : கர்நாடகாவில் நடப்பாண்டு பட்ஜெட்டில் ஆங்கில வழியில் பாடம் கற்பிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை:
ஆங்கிலவழிக் கல்விக்கான தேவை அதிகரிப்பதை கருத்தில் வைத்து, மாநிலத்தில் உள்ள 4,134 அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி, பெங்களூரு வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள 1,103 பள்ளிகளிலும்; மற்ற மாவட்டங்களில் 2,897 பள்ளிகள் உட்பட 4,134, அரசு பள்ளி களில் ஆங்கிலவழிக் கல்வி துவக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.