நைஜிரியாவில் படகு கவிழ்ந்து 8 பேர் பலி; 100 பேர் மாயம்
நைஜிரியாவில் படகு கவிழ்ந்து 8 பேர் பலி; 100 பேர் மாயம்
ADDED : ஜன 17, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபுஜா,
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜிரியாவில் உள்ள நைஜர் மாநிலத்தின் போர்கு மாவட்டத்தை சேர்ந்த பயணியர் அண்டை மாநிலமான கெப்பியில் உள்ள சந்தைக்கு, நேற்று முன்தினம் படகில் சென்றனர்.
நைஜர் ஆற்றில் சென்ற அந்த படகில் 100க்கும் அதிகமான பயணியர் மற்றும் தானிய மூட்டைகள் ஏற்றி செல்லப்பட்டன.
அப்போது, திடீரென பயங்கர காற்று வீசியது. ஏற்கனவே அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி சென்ற அந்த படகு கட்டுப்பாட்டை இழந்து திடீரென நீரில் மூழ்கியது.
இதில் எட்டு பயணியர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி நடக்கிறது.

