டில்லியில் வங்கதேசத்தினர் 92 பேர் கைது; சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை!
டில்லியில் வங்கதேசத்தினர் 92 பேர் கைது; சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை!
UPDATED : மே 27, 2025 05:32 PM
ADDED : மே 27, 2025 05:30 PM

புதுடில்லி: டில்லியில் போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 92 பேரை போலீசார் கைது செய்தனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், டில்லியில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, தென்மேற்கு டில்லியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கண்டறிந்தனர்.
அவர்களது ஆவணங்களை போலீசார் சரி பார்த்தனர். அப்போது போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 92 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் சிலர் இந்தியா- வங்கதேச எல்லையில் உள்ள ஆறுகளைக் கடந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை ஒப்புக்கொண்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை டில்லியில் சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.