ADDED : ஜன 24, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டா, ராஜஸ்தான் மாநிலம் புண்டி மாவட்டம் குஜாரியா கா கேதா கிராமத்தை சேர்ந்த இளைஞர் நரேந்திர குர்ஜார், 22. இவர், தன் நண்பர் ஜுக்ராஜ் குர்ஜார், 20, உடன் சேர்ந்து ரெயின் கிராமத்தில் உள்ள காதலியை பார்க்க சென்றார். இது குறித்து உறவினர்களுக்கு தெரியவந்தது.
இதையடுத்து விரைந்து வந்த காதலியின் உறவினர்கள் நரேந்திரா மற்றும் ஜுக்ராஜை பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நரேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.