ரயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவில் அமலாகும் புதிய மாற்றம்: கட்டாயமாகிறது ஆதார் சரிபார்ப்பு
ரயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவில் அமலாகும் புதிய மாற்றம்: கட்டாயமாகிறது ஆதார் சரிபார்ப்பு
ADDED : செப் 16, 2025 08:16 AM

புதுடில்லி; ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு ஆதார் சரிபார்ப்பு பணிகள் கட்டாயமாகிறது. இந்த புதிய நடைமுறை அக்.1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வோர்களில் பெரும்பான்மையோர் ஐஆர்சிடிசி என்ற இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இந்தியன் ரயில்வே அங்கீகரித்த அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி (App) மூலமும் டிக்கெட்டுளை முன்பதிவு செய்யலாம் என்றாலும் அதிகமானோரின் தேர்வு என்பது ஐஆர்சிடிசி ஆக உள்ளது.
இந் நிலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, முதல் 15 நிமிடங்களுக்குள் ஆதார் விவரம் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் புக்கிங் செய்யலாம்.
இந்த புதிய விதியானது அக்.1 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முன்னதாக, இவ்விதி, தட்கல் முறையிலான முன்பதிவுக்கு மட்டுமே இருந்தது. தட்கல் ஆன்லைன் முன்பதிவின் போது பயணிகள் கணக்கு ஆதாருடன் சரிபார்க்கப்படும். அப்படி சரிபார்க்கப்படவில்லை என்றால் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாது.