ADDED : ஜூலை 11, 2024 05:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திஸ்பூர்: அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் வேகமாக வந்த ரயிலில் அடிபட்டு காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் யானை மீது அந்த வழியாக வந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்து நிலைக்குலைந்த யானை, நடக்க முடியாமல் தடுமாறி தண்டவாளத்திலேயே விழுந்து உயிரிழந்தது. இது சம்பந்தமான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.