sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க ஏற்பாடு

/

இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க ஏற்பாடு

இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க ஏற்பாடு

இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க ஏற்பாடு

3


ADDED : ஜூன் 19, 2025 06:52 PM

Google News

3

ADDED : ஜூன் 19, 2025 06:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இஸ்ரேலில் இருந்து இந்தியா திரும்ப விரும்பும் அனைவரையும் மீட்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போர், நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இரு நாடுகளும் ஏவுகணையை கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஈரான் தாக்குதலில், இஸ்ரேலில் கடும் சேதம் இல்லாவிட்டாலும், ஆங்காங்கே பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

நேற்று முன்தினம் ஈரான் நடத்திய தாக்குதலில் மருத்துவமனை கட்டடம் சேதம் அடைந்து 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் அனைவரையும், 'ஆபரேஷன் சிந்து' திட்டத்தில் மீட்டு அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியா வர விரும்புவோர் உடனடியாக, இந்திய துாதரகத்தில் முன் பதிவு செய்ய வேண்டும் என்று துாதரக எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Tel Aviv: telephone numbers: +972 54-7520711; +972 54-3278392; email: cons1.telaviv@mea.gov.in.

இஸ்ரேல் உடன் நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடுகள் வழியாக, இந்தியர்கள் மீட்கப்படுவர். அங்கிருந்து விமானம் மூலம் அவர்கள் இந்தியா அழைத்து வரப்படுவர் என்று துாதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us