கனவுகளுடன் லண்டன் புறப்பட்ட ஆட்டோ டிரைவர் மகள் பலி
கனவுகளுடன் லண்டன் புறப்பட்ட ஆட்டோ டிரைவர் மகள் பலி
ADDED : ஜூன் 15, 2025 01:47 AM

குஜராத்தின் ஹிமத் நகரைச் சேர்ந்த இளம்பெண் பாயல். அவரது தந்தை சுரேஷ் காதிக் லோடு; ஆட்டோ டிரைவர். சிறு வயதில் இருந்தே படிப்பில் சிறந்து விளங்கிய பாயல், ராஜஸ்தானின் உதய்பூரில் பி.டெக்., படிப்பை முடித்துவிட்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் படிக்க விரும்பினார்.
அதற்காக லண்டன் செல்ல விரும்பினார்.மகள் வெளிநாடு சென்று படித்து வேலைக்குச் சென்றால், குடும்ப வறுமை தீரும் என்று பல்வேறு இடங்களில் கடன் வாங்கி ஏற்பாடு செய்தார் தந்தை சுரேஷ். அவர் குடும்பத்தில் வெளிநாடு சென்று படிக்கும் முதல் நபர் பாயல்.
காலை 10:00 மணிக்கே விமான நிலையம் சென்ற பாயல் குடும்பத்தினர், அவரை வழியனுப்பிவிட்டு வீடு திரும்பினர். லண்டன் சென்று படிப்பில் சிறந்து விளங்குவார் என நம்பிக்கையுடன் திரும்பிய அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
'ஏர் இந்தியா' விமான விபத்தில் பாயல் உயிர் இழந்தார். சுரேஷ் குடும்பத்தினரின் கனவு தகர்ந்தது.

