ADDED : ஜூன் 04, 2024 01:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: லோக்சபா தேர்தலில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ள நிலையில் பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ,., தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் ஐக்கியஜனதா தளம் உள்ளது. இக்கூட்டணியில் பீஹாரில் 40 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 17 தொகுதிகளிலும், பா.ஜ., 16 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்த சூழ்நிலையில் இன்று பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.