UPDATED : ஜூன் 28, 2024 09:27 AM
ADDED : ஜூன் 28, 2024 08:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: முஸ்லிம் கட்சியை சேர்ந்த தலைவர் பார்லி., உறுப்பினர் ஓவைசி வீட்டில் மர்ம நபர்கள் சிலர் கறுப்பு மையை வீசி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அகில இந்திய மஜீஸ் இ அல் முஸ்லிமீன் கட்சியை சேர்ந்தவர் ஓவைசி. ஆந்திர மாநிலத்தில் இருந்து ஐதராபாத் எம்பி.,யாக தேர்வானார். சமீபத்தில் பதவியேற்பின் போது ஜெய் பாலஸ்தீனம் என்ற கோஷத்தை எழுப்பினார். இது பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அவரது வீட்டில் கறுப்பு மை வீசப்பட்டது.
கண்டனம்
இது குறித்து ஓவைசி அவரது எக்ஸ் வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் எம்பிக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் மத்திய அரசை குறை கூறியுள்ளார்.