பூட்டிக் கிடந்த காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் சடலம்; ஹரியானாவில் அதிர்ச்சி
பூட்டிக் கிடந்த காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் சடலம்; ஹரியானாவில் அதிர்ச்சி
UPDATED : மே 27, 2025 03:19 PM
ADDED : மே 27, 2025 09:33 AM

டேராடூன்: ஹரியானாவில் பூட்டிக் கிடந்த காரின் உள்ளே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூனைச் சேர்ந்தவர் பிரவீன் மிட்டல்,42. இவர் தனது பெற்றோர், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் காரில் மயக்கமடைந்த நிலையில் கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், காரின் கண்ணாடியை உடைத்து 7 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர். ஆனால், அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 7 பேரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
சடலங்கள் எடுக்கப்பட்ட காரில் இருந்து அவர்கள் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அதில், அதிகளவு கடன் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
மேலும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.