ADDED : ஜன 27, 2024 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: தங்கவயல் புத்த மத முன்னணி பிரசாரகர் மிலிந்தர், 59, நேற்று முன்தினம் மாலை திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது உடல் நேற்று மாலை, புத்த மத வழிபாட்டு முறைப்படி, கெமந்தோ பந்தேஜி தலைமையிலான புத்த மத பிக்குகள் மந்திரங்கள் ஓதி, அடக்கம் செய்தனர்.
புத்த விஹார், அசோக தம்ம துாத புத்தர் கோவிலின் நிர்வாகிகள் டாக்டர் பூர்னேஷ் ராஜ், கவுதமன் ஜெயபிரகாஷ், ரவிசந்திரன், மதிவாணன், பிரதாபன், அம்பேத்கர் மக்கள் பேரவை சிவராஜ், பேராசிரியர் கிருஷ்ண குமார், கவுன்சிலர் பிரவீன்.
முன்னாள் கவுன்சிலர் அமல்தாஸ், அம்பேத்கர் தேசிய மன்ற தலைவர் தாடி அன்பழகன் உட்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.