ADDED : ஜூன் 22, 2025 01:30 AM

சென்னை:உலகின் சிறந்த பல்கலை, 2026ம் ஆண்டுக்கான கியூ.எஸ்., தரவரிசை பட்டியலில், சண்டிகர் பல்கலை 575வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
அடுத்த ஆண்டுக்கான கியூ.எஸ்., உலக பல்கலைகளின் தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், சண்டிகர் பல்கலை, உலக அளவில் 575வது இடம், இந்திய பல்கலைகளில் 16ம் இடத்தை பெற்றுள்ளது; கடந்த ஆண்டும் இந்திய அளவில் 16ம் இடமே பெற்றிருந்தது.
இந்த பல்கலை, வேலை வழங்குனரின் நற்பெயரில் 12ம் இடம், உலகத்தர ஆராய்ச்சியில் 13ம் இடம், ஒட்டுமொத்த மதிப்பீட்டில் 125வது இடம் என, பல்வேறு தரநிலைகளை பெற்றுள்ளது.
உலக அளவில் ஆராய்ச்சியில் கடந்த ஆண்டு 14ம் இடத்தை பிடித்த நிலையில், இந்த ஆண்டு இரண்டு இடங்கள் முன்னேறி, 12ம் இடத்தை பிடித்துள்ளது.
இப்பல்கலை 4,300க்கும் அதிகமான காப்புரிமைகளை பெற்றுஉள்ளதுடன், நாட்டின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ளது.
இது குறித்து, ராஜ்யசபா எம்.பி.,யும், சண்டிகர் பல்கலை வேந்தருமான சத்னம் சிங் சந்து கூறுகையில், ''பல்கலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் அர்ப்பணிப்பால், சண்டிகர் பல்கலை இந்த சிறப்பு நிலையை அடைந்துள்ளது. இன்னும் பல சிறப்புகளை அடைய தொடர்ந்து பாடுபடுவோம்,'' என்றார்.