UPDATED : ஜூன் 12, 2024 11:21 AM
ADDED : ஜூன் 12, 2024 09:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஒடிசா முதல்வராக பாஜ.,வின் மோகன் மஜி இன்று (ஜூன் 12) பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
ஒடிசாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. இன்று (ஜூன் 12) புவனேஸ்வரில் நடக்கும் விழாவில், ஒடிசாவில் முதல்வராக மோகன் மஜி பதவியேற்கிறார். மாலை 5 மணிக்கு நடக்கும் விழாவில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர்.
பிஜூ ஜனதா தளத்தின் தலைவர் நவின் பட்நாயக்கிற்கும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.