சிக்கபல்லாபூரில் போட்டி பா.ஜ., ' மாஜி' சுதாகர் தகவல்
சிக்கபல்லாபூரில் போட்டி பா.ஜ., ' மாஜி' சுதாகர் தகவல்
ADDED : பிப் 05, 2024 11:09 PM

க்கபல்லாபூர்: ''லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாபூர் தொகுதியில் பா.ஜ.,வில் போட்டியிடுகிறேன். நாட்டின் வளர்ச்சியின் கவனம் செலுத்தும் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கடுமையாக உழைக்க தயாராக இருக்கிறோம்,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன், புதுடில்லியில் கட்சி மேலிட தலைவர்களை, பா.ஜ., முன்னாள் அமைச்சர் சுதாகர் சந்தித்து பேசினார். பின், கர்நாடகா திரும்பினார்.
இந்நிலையில், சிக்கபல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட செல்லுார் டவுனில் நேற்று பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று அவர் பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம். இதனாலேயே நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க நாம் அனைவரும் உழைக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாபூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்.
நாட்டின் வளர்ச்சியின் கவனம் செலுத்தும் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் கடுமையாக உழைக்க தயாராக இருக்கிறோம்.
'சுதாகர் என்றால் வளர்ச்சி, வளர்ச்சி என்றால் சுதாகர்'. நான் எப்போதும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.
எம்.பி.,யானால் தொகுதி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைத்ததில், நானும், எம்.டி.பி.நாகராஜும் முக்கிய பங்கு வகித்தோம். எடியூரப்பாவை முதல்வராக்க வேண்டும் என்ற நோக்கில், நாங்கள் இருவரும் 'ரிஸ்க்' எடுத்து பா.ஜ.,வில் இணைந்தோம்.
ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஆசி பெற்று, தொகுதியில் பிரசாரத்தை துவக்கி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.