ADDED : செப் 12, 2025 02:21 AM
பரீதாபாத்,:ஹீராலால் என்ற ஒப்பந்ததாரர் மற்றும் முன்னாள் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியான பூஜா சர்மா ஆகிய இருவர் தான் கைது செய்யப்பட்டவர்கள். பரீதாபாத் அருகே உள்ள முஜேதி என்ற கிராம பஞ்சாயத்தில் இவர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களில் ஹீராலால் நீதிமன்ற காவலில் உடனடியாக அனுப்பப்பட்டார்.
பூஜா சர்மா, போலீஸ் விசாரணைக்காக, இரண்டு நாட்கள் காவலில் அனுப்பப்பட்டார். இவர்களை கைது செய்தது தொடர்பான எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கையில், வேலை நடந்ததாக காட்டி, போலி பில்களை தயாரித்து, அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ல் நடந்த இந்த முறைகேடு வழக்கில், இதற்கு முன், கிராம தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலர்கள் என பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உ.பி., மாநில போலீசாரால் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கை, 2023 முதல், உ.பி., லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.