வீடுகளில் திருடியவர் கைது
பெங்களூரின், பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடிய இம்ரான் கான், 26, என்பவரை, கோவிந்தராஜ நகர் போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 4.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சாலை விபத்தில் ஒருவர் பலி
விஜயபுராவின், தளவடாவில் நேற்று மதியம், முகமது கோல்ஹார், 40, சாலையில் நடந்து சென்றார். அப்போது போர்வெல் லாரி மோதியதில், அவர் உயிரிழந்தார்.
பெண் கொலை
மாண்டியாவின், கல்லஹள்ளி அருகில், ரயில்வே கேட் அருகில் உள்ள சாக்கடையில், பெண்ணொருவரின் உடல் அரை நிர்வாண நிலையில் நேற்று காலை கிடந்தது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், உடலை மீட்டனர். அப்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
கூரை இடிந்து மாணவி காயம்
ராய்ச்சூர், தேவதுர்காவில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. நேற்று காலை ஏழாம் வகுப்பில், மாணவர்களுக்கு பாடம் நடக்கும் போது மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் மாணவி ஸ்ரீதேவி, 12, வலது காலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
ஓய்வு தாசில்தார் வீட்டில் தீ
கொப்பால், குஷ்டகியின், புத்தி பசவேஸ்வரா நகரில், ஓய்வு பெற்ற தாசில்தார் மகாந்தேஷ் வசிக்கிறார். நேற்று காலை மின் கசிவு ஏற்பட்டு, இவரது வீட்டில் தீப்பிடித்ததில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையானது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.

