ADDED : செப் 12, 2025 02:22 AM
புதுடில்லி:சிறுமி ஒருவரை கடத்திய குற்றம் தொடர்பாக, டில்லியின் ரோஹினி பகுதியில் ரவுடி ஒருவரை போலீசார் பிடித்தனர். 23 வயதான அவரிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், மூன்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
சாஜத் என்ற உவேஷ், 23, என்ற நபர் தான், போலீசாரால் கைது செய்யப்பட்டவர். மங்கல்புரியை சேர்ந்த அவரை தேடி வந்த போலீசார், கைது செய்தனர். சிறுமி ஒருவரிடம், கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டி, கடத்திய வழக்கு தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், ரோஹினி அருகே நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.
சைப் - கைப் தாதா கும்பலை சேர்ந்த அந்த ரவுடி, அவுட்டர் டில்லி பகுதியில் செயல்பட்டு வந்தார். அவ்வப்போது துப்பாக்கியை காட்டி மிரட்டி, தொழிலதிபர்களிடம் பணம் பறித்து வந்ததாக அவர், போலீசில் அளித்த வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். அவரை கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரிக்கின்றனர்.