ADDED : ஜூன் 14, 2025 02:08 AM

விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. மக்களுக்காக அர்ப்பணித்த ஒரு பணிவான தலைவர் ரூபானி. அமைதியான நடத்தை மற்றும் உறுதியான நிர்வாக பணிக்கு அவர் பெயர் பெற்றவர். அவரது இழப்பு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு.
சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்
துயரமான சம்பவம்!
ஆமதாபாத் விமான விபத்து மிகவும் கொடூரமான மற்றும் துயரமான சம்பவம். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். எதிர் காலத்தில் இது போன்ற சம்பவங்களை தவிர்க்க, இந்த விஷயத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பிருந்தா காரத், மூத்த தலைவர்,மார்க்.கம்யூ.,
விசாரணை வேண்டும்!
ஏர் இந்தியா விமான விபத்து ஒட்டுமொத்த நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பாக, பல்வேறு தகவல்கள் பரப்பப்படுகின்றன. உண்மையை வெளிக்கொணர முழுமையான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.
குணால் கோஷ், செய்தித் தொடர்பாளர், திரிணமுல் காங்.,