ADDED : ஜன 27, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு- வரதட்சணை கொடுமையால், பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மைசூரு, நஞ்சன்கூடின், ஹொஸ்கோட்டே கிராமத்தில் வசிப்பவர் ஹரிஷ், 40. இவரது மனைவி விஜயலட்சுமி, 35. திருமணமான நாளில் இருந்தே, விஜயலட்சுமியை கணவன் வீட்டினர் கொடுமைப்படுத்தினர்.
வரதட்சணை பணத்துக்காக, கணவர், மாமனார், மாமியார், மைத்துனர் ஆகியோர் சேர்ந்து, சித்ரவதை செய்தனர்.
இதனால் மனம் நொந்த விஜயலட்சுமி, நேற்று காலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பிளிகெரே போலீசார் விசாரிக்கின்றனர்.

