ADDED : ஜூலை 25, 2024 03:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முக்கிய அரங்க பெயர் கள் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஷ்ட்டிரபதி பவன் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்கள் ஏதுவாக அணுகும் வகையில் ஜனாதிபதி மாளிகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது. பாரம்பரிய மிக்க , இந்திய கலாசாரங்களை பறைசாற்றும் விதமாக ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ளது. ஜனாதிபதி கேட்டு கொண்டதன் பேரில் இங்குள்ள முக்கிய தர்பார் ஹால் இனி ஞானதந்திரா மண்டபம் என்றும், அசோக் ஹால் அசோக் மண்டபம் என்றும் அழைக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தர்பார் ஹால் என்பது தேசிய அளவிலான விருதுகள் வழங்கும் விழா நடக்கும் பகுதி ஆகும். பேச்சு வழக்கிற்கு ஏதுவாக இது அமையும் என்றும் தெரிவித்துள்ளது.