ரூ.2.65 கோடியில் மின் விளக்குகள் ரூபகலா எம்.எல்.ஏ., தகவல்
ரூ.2.65 கோடியில் மின் விளக்குகள் ரூபகலா எம்.எல்.ஏ., தகவல்
ADDED : ஜன 26, 2024 11:55 PM

தங்கவயல் -“தங்கவயலில் 10 கி.மீ., சுற்றளவு முழுவதற்கும் 2.65 கோடி ரூபாய் செலவில் தெரு விளக்குகள் அமைக்கப்படும்,” என, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தெரிவித்தார்.
தங்கவயலில் அசோகா நகர், பெமல் நகர், ராபர்ட்சன் பேட்டை, சொர்ணா நகர் ஆகிய பகுதிகளில் நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்த பின் அவர் அளித்த பேட்டி:
தங்கவயலில் பல இடங்களில் மின் விளக்குகள் பற்றாக்குறை இருப்பதால் பாதிப்பாக உள்ளது.
எனவே 2.65 கோடி ரூபாய் மதிப்பில் 10 கி.மீ., சுற்றளவுக்கு மின் விளக்குகளை பொருத்தப்படும்.
தங்கவயலில் இரண்டு இடங்களில் இந்திரா உணவகம் ஏற்படுத்த கோரினேன்.
அரசு, மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் மட்டுமே ஒரு உணவகம் அமைக்க அரசு அனுமதி அளித்தது. அதன் பணிகள் நடந்து வருகின்றன.
சஞ்சய் காந்தி நகரில் வாஜ்பாய், அம்பேத்கர் குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் சிதிலமடைந்துள்ளது. இதனை புதுப்பிக்க குடிசை மாற்றுவாரியத்திடம் வலியுறுத்தி உள்ளேன்.
அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் சுகாதார நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தங்கவயலுக்கு வர உள்ளார். அப்போது மருத்துவ அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

