காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் மோதல்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் மோதல்
ADDED : ஜூலை 02, 2025 10:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிஸ்திவார்: ஜம்மு காஷ்மீரின் அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.
சட்ரூ பகுதியில் உள்ள குட்சல் என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனை பார்த்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். பயங்கரவாதிகளை வீழ்த்தவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் அந்த பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.