சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கு: ராபர்ட் வாத்ராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கு: ராபர்ட் வாத்ராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
UPDATED : ஜூன் 17, 2025 07:34 AM
ADDED : ஜூன் 16, 2025 07:40 PM

புது டில்லி: சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா. சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடி தொடர்பான வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. ஹரியானாவில் விதிமுறைகளை மீறி நிலம் வாங்கியது குறித்த வழக்குகளும் உள்ளன.
இந்த வழக்குகளில் அவரிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில், அவரை இன்று 17ம் தேதி டில்லியில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நிதி முறைகேடுகள் மற்றும் வெளிநாட்டு சொத்துக்களை கையகப்படுத்துதல் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தப்பியோடிய ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியுடன் இருக்கும் தொடர்பு குறித்தும் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.