வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இன்ஜினியர்கள்; பிரதமர் மோடி
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இன்ஜினியர்கள்; பிரதமர் மோடி
ADDED : செப் 15, 2025 09:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளில் இன்ஜினியர்கள் முக்கிய பங்களிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் தளப்பதிவு; இன்று இன்ஜினியர்கள் தினம். இந்த நாளில் இந்தியாவின் இன்ஜினியரிங் துறைக்கு அழியாத முத்திரை பதித்த சர் எம்.விஸ்வேஷ்வரய்யாவுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.
அனைத்துத் துறைகளிலும் தங்களின் படைப்பாற்றல் மற்றும் தீர்மானத்தின் மூலம் புதுமைப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்து, கடினமான சவால்களை சமாளிக்கும் அனைவருக்கும் நான் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளில் இன்ஜினியர்கள் முக்கிய பங்களிக்கின்றனர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.