ADDED : மார் 25, 2025 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்; கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் பெண்ணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், அப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தது, திருவனந்தபுரத்தில் சர்வதேச விமான நிலையத்தின் குடியேற்ற பிரிவில் பணியாற்றி வந்த மேகா, 24, என்ற பெண் போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்தது.உளவுப்பிரிவைச் சேர்ந்த இவர், மர்மமான முறையில் இறந்து கிடந்தது சக போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.