ADDED : செப் 14, 2025 12:47 AM

ஷில்லாங்:வயோதிகம் தொடர்பாக ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்த மேகாலயா முன்னாள் முதல்வர் டோன்வா டெத்வெல்சன் லபாங், 93, நேற்று காலமானார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின் முன்னாள் முதல்வர் லபாங், 93, ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் நேற்று காலமானார்.
வயோதிகம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார்.
ஏழை குடும்பத்தில் பிறந்த லபாங், 1972ல் நாங்போ சட்டசபை தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ., ஆனார். பின்னர் காங்கிரசில் சேர்ந்த இவர், 1992 முதல் 2010 வரை நான்கு முறை முதல்வராக பணியாற்றினார்.
தொடர்ந்து, 2018ல் தேசிய மக்கள் கட்சியில் சேர்ந்த இவர், மாநில முதன்மை ஆலோசகராக பணியாற்றினார். 'மஹே' என அழைக்கப்படும் லபாங் டீக்கடை தொழிலாளி, ஆசிரியர், அரசு ஊழியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

