ADDED : ஜன 26, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்ரதுர்கா: பாலத்தின் மீது, கார் மோதியதில் மூன்று குழந்தைகள் உட்பட, நால்வர் உயிரிழந்தனர்.
ராய்ச்சூர், தேவதுர்காவின், தன்டம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர், நேற்று முன்தினம் இரவு காரில் சித்ரதுர்காவுக்கு புறப்பட்டனர்.
சித்ரதுர்கா, செல்லகெரேவின், சானிகெரே அருகில் தேசிய நெடுஞ்சாலை - 150ல், நேற்று அதிகாலை செல்லும் போது, ஓட்டுனருக்கு துாக்க கலக்கம் ஏற்பட்டது.
இதனால், கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியது. காரில் இருந்த லிங்கப்பா, 26, சிந்துஸ்ரீ, 2, ஐந்து மாத ஆண் குழந்தை அய்யளப்பா, மூன்று மாத பெண் குழந்தை ரக்ஷா உயிரிழந்தனர்.
எல்லம்மா, 30, மல்லம்மா, 20, நாகப்பா, 35, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

