ADDED : ஜூன் 09, 2024 03:00 PM

புதுடில்லி: பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொள்கிறார்.
பிரதமராக மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் கட்சி நேற்று கூறியிருந்தது. நேற்று இரவு பா.ஜ., தலைவர் பிரஹலாத் ஜோஷி, கார்கேயை தொடர்பு கொண்டு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, விழாவில் கலந்து கொள்வது குறித்து கட்சி மூத்த தலைவர்களுடன் கார்கே ஆலோசனை மேற்கொண்டார். இண்டியா கூட்டணி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனையடுத்து, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் மோடி பதவியேற்பு விழாவில் கார்கே கலந்து கொள்வார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
சந்திப்பு
டில்லியில் தமிழக காங்., எம்.பி.க்கள் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சந்தித்தனர். அப்போது, அவர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.