அண்டப்புளுகு ஆகாசப்புளுகு; ஏ.ஐ., சொல்லும் என்கிறார் எலான் மஸ்க்
அண்டப்புளுகு ஆகாசப்புளுகு; ஏ.ஐ., சொல்லும் என்கிறார் எலான் மஸ்க்
ADDED : ஆக 04, 2024 11:42 AM

புதுடில்லி: 'தொழில் நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலை கொள்ள செய்கிறது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தை அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது அது, அதிக பொய் சொல்லும்' என டெஸ்லா மற்றும் எக்ஸ் சமூகவலைதள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்தார்.
இது குறித்து எலான் மஸ்க் கூறியிருப்பதாவது: ஏ.ஐ ., தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலை கொள்ள செய்கிறது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தை அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது, அது அதிகப்படியான பொய் சொல்லும். இது நாளடைவில் பெரிதாக மாறும். ஏ.ஐ., தொழில்நுட்பம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதால் பேரிழப்பை ஏற்படுத்தும்.
குழந்தை பிறப்பு
அமெரிக்காவில் குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறைந்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது. குழந்தை பிறப்பு குறைவதே நாகரிக வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது என்பது கடந்த கால வரலாறு. இவ்வாறு அவர் கூறினார்.