sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டாக்டர்களை உருவாக்குவதில் இந்தியா தான் 'டாப்' ஆனாலும் பற்றாக்குறை தொடர்கிறது

/

டாக்டர்களை உருவாக்குவதில் இந்தியா தான் 'டாப்' ஆனாலும் பற்றாக்குறை தொடர்கிறது

டாக்டர்களை உருவாக்குவதில் இந்தியா தான் 'டாப்' ஆனாலும் பற்றாக்குறை தொடர்கிறது

டாக்டர்களை உருவாக்குவதில் இந்தியா தான் 'டாப்' ஆனாலும் பற்றாக்குறை தொடர்கிறது


ADDED : செப் 13, 2025 11:50 PM

Google News

ADDED : செப் 13, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஆண்டுதோறும் அதிகளவு டாக்டர்களை உருவாக்கும் நாடுகள் பட்டியலில் நம் நாடு முன்னிலையில் உள்ளது. ஆனாலும், அவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற தயங்குவதால் பல இடங்களில் டாக்டர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

சுகாதார சேவையில் சிறந்து விளங்கும் இந்தியா, டாக்டர்களை உருவாக்குவதிலும் சாதனை படைத்து வருகிறது.

நம் நாட்டில், ஆண்டுதோறும் 1 லட்சத்துக்கும் அதிகமான டாக்டர்கள் உருவாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொருளாதார கூட்டுறவு வளர்ச்சிக்கான அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் புள்ளி விபரங்களின்படி, சீனாவில் ஆண்டுதோறும் 80,000 - 90,000 டாக்டர்கள் உருவாகின்றனர்.

டாக்டர்களின் தொழிற்சாலையாக கருதப்படும் ரஷ்யாவில், ஆண்டு தோறும் 70,000 பேர் தங்கள் பயிற்சியை முடிக்கின்றனர்.

ஆச்சர்யமான உண்மை இதில், பெரும்பாலானோர் பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள். இதற்கு, மருத்துவப் படிப்புக்கான கல்வி கட்டணம் அங்கு குறைவாக இருப்பதே காரணமாக கூறப்படுகிறது.

உலகளவில் சுகாதார துறையில் சிறந்து விளங்கும் அமெரிக்காவில், ஆண்டுதோறும் 27,000 டாக்டர்கள் உருவாகி வருகின்றனர் என்பது ஆச்சர்யமான உண்மை. இந்தத் தகவலை அமெரிக்க மருத்துவர்கள் சங்கம் உறுதிபடுத்தியுள்ளது.

நம் நாட்டில், அங்கீகரிக்கப்பட்ட 706 மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, 1.80 லட்சம் டாக்டர்கள் தங்கள் பயிற்சியை முடித்துவிட்டு, ஒவ்வொரு ஆண்டும் வெளியேறி வருகின்றனர்.

கடந்த 2014ல், ஆண்டுதோறும் 54,000 டாக்டர்கள் மட்டுமே உருவான நிலையில், இது இரு மடங்குக்கும் அதிகமாக தற்போது உயர்ந்துள்ளது.

மத்திய அரசு மேற்கொண்ட மருத்துவ உட்கட்டமைப்பு வளர்ச்சிகளே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. குறுகிய காலத்தில், அதிகளவு உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லுாரிகளால் மட்டுமே இந்த சாதனை சாத்தியமானதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் வாயிலாக, அதிக டாக்டர்களை உருவாக்கும் பட்டியலில், சீனா, ரஷ்ய நாடுகளை பின்தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கடந்தாண்டு, ஜூலை மாத நிலவரப்படி 13.86 லட்சம் பதிவு செய்யப்பட்ட அலோபதி டாக்டர்களையும், கூடுதலாக 5.65 லட்சம் ஆயுஷ் பயிற்சியாளர்களையும் கொண்டு, மருத்துவ நிபுணர்களை உருவாக்குவதில் உலகளாவிய தலைவராக இந்தியா திகழ்கிறது.

இது, ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அதிகளவு டாக்டர்களை உருவாக்குவதால் மட்டுமே, சிறந்த சுகாதார சேவையை வழங்க முடியாது என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மக்கள்தொகை உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, மக்கள்தொகையின் அடிப் படையில், 1,000 பேருக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும். நம் நாட்டில் இது, 854 பேருக்கு ஒரு டாக்டர் என்ற அளவில் உள்ளது. அதன்படி பார்த்தால் சிறப்பான நிலை யில் உள்ளோம்.

இருப்பினும், ந ம் நாட்டில் டாக்டர்களுக்கான பற்றாக்குறை உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிராமங்களுக்கு௵ செல்ல தயக்கம்

நம் நாட்டில் டாக்டர்களுக்கான பற்றாக்குறை அதிகமாக உள்ளதற்கு முக்கிய காரணம், மேல் படிப்புக்காக வெளிநாடு செல்வது அல்லது அங்கு பணியாற்றச் செல்வது ஆகும். குறிப்பாக ஐரோப்பிய நாடான பிரிட்டன், பிற நாடுகளி ல் படித்துவிட்டு பணியாற்ற வரும் டாக்டர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. அந்நாட்டு சுகாதாரத் துறை கணக்கின்படி, இந்தியாவைச் சேர்ந்த 30,000க்கும் மேற்பட்டோர், டாக்டர்களாக அந்நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். இதைத் தவிர, கிராமப்புறங்களில் பணியாற்ற தயக்கம் காட்டுவதும், டாக்டர்கள் பற்றாக்குறைக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. படிப்பை முடிக்கும் டாக்டர்களில், 80 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் பணியாற்றவே விருப்பம் தெரிவிக்கின்றனர். தற்போதைய சூழலில், கிராமப்புறங்களில், ஒரு டாக்டர் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவம் பார்க்கும் நிலை உள்ளது. இதனால், கிராமப்புற மக்கள் போதுமான மருத்துவ சேவையை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த ஏற்றத்தாழ்வை சமாளிக்க, தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.








      Dinamalar
      Follow us