ADDED : ஜன 17, 2024 01:31 AM

ஷிவமொகா : ஷிவமொகாவில் கட்டப்பட்டு உள்ள விமான நிலையம் குறித்து விரிவான விசாரணை நடத்த கோரி, கர்நாடக அரசுக்கு, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா கடிதம் எழுதி உள்ளார்.
பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான ஷிவமொகாவில், கடந்தாண்டு 450 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, விமான நிலையத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
இது தொடர்பாக, கர்நாடக அரசுக்கு, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
கலபுரகியில் கட்டப்பட்ட விமான நிலையத்துக்கு, 200 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது. ஆனால், ஷிவமொகாவில் கட்டப்பட்ட விமானம், 450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ளது. எனவே, இங்கு பெரும் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.
விமான நிலைய வளர்ச்சியில் மத்திய அரசுக்கு பங்கு இல்லை. மாநில மக்களின் வரிப்பணமும் இருக்கிறது. இதை கேள்வி எழுப்ப அரசுக்கும், பொது மக்களுக்கும் உரிமை உள்ளது.
மத்திய அரசின் மூலம் மாவட்டத்துக்கு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஆனால், இங்கு ஸ்மார்ட் சிட்டி உட்பட நெடுஞ்சாலை பணிகள் படுமோசமாக இருப்பதாகவும், வீணாகி வருவதாகவும் பல புகார்கள் எழுந்து உள்ளன. இது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

