sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரள முதல்வர் மகள் மீதான வழக்கு மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

/

கேரள முதல்வர் மகள் மீதான வழக்கு மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கேரள முதல்வர் மகள் மீதான வழக்கு மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கேரள முதல்வர் மகள் மீதான வழக்கு மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


ADDED : ஜன 17, 2024 12:56 AM

Google News

ADDED : ஜன 17, 2024 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொச்சி,

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முறைகேடுகள் குறித்து, நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கேரள உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் மார்க்., கம்யூ.,வை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

கேரளாவின் கொச்சியில் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கொச்சி தாது நிறுவனத்துக்கு சேவைகள் வழங்குவதற்காக இவரது நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

ஆனால், எந்த சேவையும் வழங்காமல், 2017 முதல் 2020 வரை 1.72 கோடி ரூபாய் வீணாவின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது.

இது, அரசியல் ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவ்விவகாரம் தொடர்பாக கொச்சி தாது நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சுரேஷ் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில், அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கின.

இதையடுத்து, பினராயி விஜயனின் மகள் வீணாவின் அலுவலகத்தில், கம்பெனி சட்டத்தின் கீழ் மத்திய அரசு சமீபத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதற்கிடையே, மதச்சார்பற்ற கேரள ஜனபக் ஷம் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பி.சி.ஜார்ஜின் மகனும், வழக்கறிஞருமான ஷோன் ஜார்ஜ் என்பவர், வீணாவின் நிறுவனத்தை நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்துவதுடன், அந்நிறுவனத்திற்கு எதிராக எஸ்.எப்.ஐ.ஓ., எனப்படும் தீவிர மோசடி விசாரணை அலுவலக பிரிவின் ஆய்வுக்கு உட்படுத்தக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''கம்பெனி சட்டத்தின் பிரிவு 210ன் கீழ் அந்நிறுவனத்தின் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுஉள்ளது.

''அடுத்த விசாரணையின்போது, இவ்விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதியுங்கள்,'' என, கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தேவன் ராமச்சந்திரன், இது தொடர்பான ஆவணங்களை வரும் 19ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன், வழக்கின் விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதேபோல் இவ்வழக்கின் எதிர்மனுதாரர்களாக முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, அவரது நிறுவனம், கொச்சி தாது நிறுவனம் மற்றும் கேரள மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனம் ஆகியோரையும் இணைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us