கர்நாடகாவில் கடும் மழை: 7 பேர் மண்ணில் புதையுண்ட பரிதாபம்
கர்நாடகாவில் கடும் மழை: 7 பேர் மண்ணில் புதையுண்ட பரிதாபம்
ADDED : ஜூலை 16, 2024 05:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. உத்தர கன்னட மாவட்டத்தில் கனமழை காரணமாக, இன்று (ஜூலை 16) தேசிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. 10 பேர் மண்ணில் புதைந்தனர்.
தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த 3 டேங்கர் லாரிகள் மற்றும் வீடு ஒன்று நிலச்சரிவில் சிக்கின. மண்ணில் புதைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேரின் உடல்களை மீட்பு படையினர் மீட்டனர். மாயமான 3 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.