தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அமைதியை மீட்டெடுப்போம்!

அமைதியை மீட்டெடுப்போம்!

அமைதியை மீட்டெடுப்போம்!


ADDED : ஏப் 05, 2026 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 11:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்வேறு சமூகங்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்துவதும், அமைதியை மீட்டெடுப்பதும் தான் எங்கள் அரசின் நோக்கம். அமைதி, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், ஜிர்ரிபாம் மாவட்டத்தில் அனைத்து சமூக மக்கள் பங்கேற்ற கூட்டம், நம் ஒற்றுமை உணர்வை பிரதிபலிக்கிறது.

யும்னம் கேம்சாந்த் சிங் மணிப்பூர் முதல்வர், பா.ஜ.,

சதி உள்ளது!


தமிழகம், மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பார்லி., சிறப்பு அமர்வு நடத்தப்பட உள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தங்கள் தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபடும்போது, முக்கிய மசோதாக்களின் மீதான விவாதங்கள், ஓட்டெடுப்பில் அவர்களால் எப்படி பங்கேற்க இயலும்? இதில், சதி உள்ளது.

சிதம்பரம் மூத்த தலைவர், காங்.,

மாயையில் காங்கிரஸ்!


கர்நாடகாவின் இரு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் பணம், மது மற்றும் ஆள் பலத்தால் வென்றுவிடலாம் என்ற மாயையில் காங்கிரஸ் உள்ளது. சிறுபான்மையினர், அக்கட்சியின் உண்மை முகத்தை நன்கு அறிந்துள்ளதால், அவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்க மாட்டர். எனவே, மக்கள் அவர் களுக்கு பாடம் புகட்டுவர்.

எடியூரப்பா முன்னாள் முதல்வர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us