கர்நாடகாவில் லோக்ஆயுக்தா ரெய்டு: 11 அதிகாரிகளிடம் ரூ. 45 கோடி பறிமுதல்
கர்நாடகாவில் லோக்ஆயுக்தா ரெய்டு: 11 அதிகாரிகளிடம் ரூ. 45 கோடி பறிமுதல்
ADDED : ஜூலை 11, 2024 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நேரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் ரெய்டு நடத்தி ரூ. 45 கோடி ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
கர்நாடகாவில் பல்வேறு துறை அரசு உயரதிகாரிகள் மீது ஊழல் புகார்கள் எழுந்ததையடுத்து, நேற்று லோக் ஆயுக்தா போலீசார் 9 மாவட்டங்களில் 56 இடங்களில், ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தினர். மொத்தம் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் இல்லங்களில் இந்த ரெய்டு நடந்ததாக கூறப்படுகிறது.
இதில் 11 உயரதிகாரிகளிடம் கணக்கில் வராத ரூ. 45 கோடி ரொக்கப்பணத்தை லோக் ஆயுக்தா போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆவணங்களையும் கைப்பற்றினர்.