UPDATED : ஜூன் 01, 2025 01:10 AM
ADDED : மே 31, 2025 10:13 PM

ஐதராபாத்: தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங் ஸ்ரீ, 2025ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.
ஐதராபாத்தில் நடந்த உலக அழகி போட்டியின் இறுதிப்போட்டி இன்று( மே 31) இரவு ஹைடைக்ஸ் அரங்கில் நடந்தது. சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்ட போட்டியில் இந்தியா சார்பில், 'மிஸ் இந்தியா' பட்டம் வென்ற நந்தினி குப்தா பங்கேற்றார். 40 பேர் காலிறுதிக்கு முன்னேறினர். இதில் முதல் 8 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை நந்தினி குப்தா தவறவிட்டார்.
தொடர்ந்து இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று, தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங் ஸ்ரீ 2025ம் ஆண்டிற்கான உலக அழகியாக தேர்வானார். எத்தியோப்பியாவை சேர்ந்த ஹசேட் டெரேஜே அட்மாசு இரண்டாவது இடத்தை பிடித்தார்.