மோடி கட்சி அலுவலகம் வருகை: நாளை தே.ஜ., கூட்டணி ஆலோசனை
மோடி கட்சி அலுவலகம் வருகை: நாளை தே.ஜ., கூட்டணி ஆலோசனை
UPDATED : ஜூன் 04, 2024 07:35 PM
ADDED : ஜூன் 04, 2024 07:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள்
அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தே.ஜ. கூட்டணி கட்சி தலைவர்கள்
பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நாளை (ஜூன் 05) டில்லியில் நடக்கிறது. இதில்
தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் பங்கேற்க உள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
மோடி தலைமை அலுவலகம் வருகை
லோக்சபா
தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடி,
இன்று ( ஜூன் 04) டில்லியில் பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு 7:45 மணியளவில் வர
உள்ளதாகவும், மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது,