தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தேசியம் - பேட்டி

 தேசியம் - பேட்டி

 தேசியம் - பேட்டி


ADDED : மே 07, 2026 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 03:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவர்கள் ஊடுருவல்காரர்கள்? லோக்சபாவில் நுழையும் ஒவ்வொரு ஆறாவது பா.ஜ., - எம்.பி.,யும் ஓட்டுத் திருட்டு வாயிலாகவே தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களை ஊடுருவல்காரர்கள் என அழைக்கலாமா? நியாயமான முறையில் தேர்தல் நடந்தால், லோக்சபாவில் 140 இடங்களை கூட பா.ஜ., பெறாது. ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்

ஜனநாயகம் மிரட்டப்படுகிறது! மே.வங்கத்தில் துப்பாக்கி முனையில் ஜனநாயகம் மிரட்டப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்கு பின்னரும், அதை மதிக்காமல் மம்தா அராஜகம் செய்கிறார்; மக்களின் முடிவை நிராகரிக்கிறார். அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதால், தேர்தல் கமிஷன், பாதுகாப்பு படைகளின் நம்பகத்தன்மையை சிதைக்க முயல்கிறார். தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சர், பா.ஜ.,

தகுதியற்ற தலைவர்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் களை ஊடுருவல்காரர்கள் என ராகுல் அழைப்பது கண்டிக்கத்தக்கது. இண்டி கூட்டணியை வழிநடத்த தெரியாத ராகுல், ஒரு தகுதியற்ற தலைவர். அந்த கூட்டணி விரைவில் உடைவதற்கு அவரே காரணமாக இருப்பார். திருடர்களாக இருப்பவர்கள்தான், மற்றவர்களை திருடர்கள் என்பர். சம்பித் பத்ரா லோக்சபா எம்.பி., - பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us