
உலகமே வியப்படைகிறது!
அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகக் கண்ணோட்டத்தில் இருந்து இந்தியா மாறி விட்டது. நம் நாடு தற்போது மிகவும் பிரபலமாகி விட்டது. நாம் முன்னேறும் வேகத்தை கண்டு உலகமே வியப்படைகிறது. நாம் தற்போது எந்த நாட்டையும் சார்ந்திருக்கவில்லை.
ஜக்தீப் தன்கர்
துணை ஜனாதிபதி
வலிமையான நாடாக இந்தியா!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், நம் நாடு தற்போது வலிமையான மற்றும் சக்தி வாய்ந்த நாடாக மாறி உள்ளது. நம்மை யாரும் தற்போது பலவீனமாக கருதவில்லை. இதற்கான பெருமை, பிரதமர் நரேந்திர மோடிக்கு தான்.
ராஜ்நாத் சிங்
ராணுவ அமைச்சர், பா.ஜ.,
கருத்து தெரிவிக்காதீங்க!
உ.பி.,யின் அயோத்தியில், 500 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின், ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்கு வர, கோடிக்கணக்கான மக்கள் தயாராக உள்ளனர். இந்நேரத்தில், கோவில் குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிப்பதை நிறுத்த வேண்டும்.
அனுராக் தாக்குர்
மத்திய அமைச்சர், பா.ஜ.,

