ரூ.1 கோடி அறிவிக்கப்பட்ட நக்சல் தளபதி சுட்டுக்கொலை
ரூ.1 கோடி அறிவிக்கப்பட்ட நக்சல் தளபதி சுட்டுக்கொலை
ADDED : செப் 16, 2025 07:19 AM

ராஞ்சி : ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள பண்டித்ரி என்ற வனப்பகுதியில், நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, அந்த பகுதியை நம் வீரர்கள் நேற்று சுற்றி வளைத்தனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்கள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், மூன்று நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில், சஹ்தேவ் சோரன் என்பவர் நக்சல் அமைப்பின் முக்கிய தளபதியாக செயல்பட்டு வந்ததும், ஜார்க்கண்டில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
இவரை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு, 1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதே போல், இறந்த ரகுநாத் ஹெம்பிராம், பிர்சென் கஞ்சு ஆகியோருக்கு முறையே 25 லட்சம்; 10 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

