ADDED : பிப் 25, 2024 02:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: தங்கவயல் தாசில்தாராக ராமலட்சுமையா பதவியேற்றார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாநில அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பெங்களூரு மாவட்ட தேர்தல் பணி அதிகாரியாக இருந்த ராமலட்சுமையா, தங்கவயல் தாலுகா தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று முன் தினம் பதவியேற்றார்.
தங்கவயல் தாசில்தாராக இருந்த நாகவேணி, கோலார் மாவட்ட கலெக்டர் ஆபிஸ் சூப்ரிடென்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் சங்க தங்கவயல் கிளை நிர்வாகிகள், புதிய தாசில்தாரை வரவேற்றும், இடமாறிச் செல்லும் தாசில்தாருக்கு பிரியா விடையும் அளித்தனர்.

