sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆதார் நகலுடன் இனி அலைய வேண்டாம்; க்யூ.ஆர்., கோடு வழியாக சரிபார்க்க முடிவு

/

ஆதார் நகலுடன் இனி அலைய வேண்டாம்; க்யூ.ஆர்., கோடு வழியாக சரிபார்க்க முடிவு

ஆதார் நகலுடன் இனி அலைய வேண்டாம்; க்யூ.ஆர்., கோடு வழியாக சரிபார்க்க முடிவு

ஆதார் நகலுடன் இனி அலைய வேண்டாம்; க்யூ.ஆர்., கோடு வழியாக சரிபார்க்க முடிவு

2


ADDED : ஜூன் 17, 2025 03:51 AM

Google News

2

ADDED : ஜூன் 17, 2025 03:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஆதார் அட்டைக்கான நகலை சமர்ப்பிக்காமல், க்யூ.ஆர்., கோடு வாயிலாக ஆவணங்களை சரிபார்க்கும் செயலியை அறிமுகப்படுத்த ஆதார் ஆணையம் முடிவு செய்துள்ளது.

நம் நாட்டில் வங்கி சேவை, சிம் கார்டு, பான் அட்டை, ரேஷன் கார்டு, அரசு நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் இல்லாமல் எதுவும் செய்ய முடியாத நிலையால், பெரும்பாலானோர் கைகளிலேயே ஆதார் அட்டை நகல்களை எடுத்துச் செல்லும் நிலையும் உள்ளது.

பொதுமக்களின் இந்த சுமையை குறைக்கும் வகையில், ஆதார் அட்டைகளை வழங்கும் 'உதாய்' எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய முடிவை எடுத்துள்ளது.

இதற்காக மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் புதிய செயலியை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய செயலியால், ஆதார் அட்டையின் நகலை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

க்யூ.ஆர்., கோடு முறையை பயன்படுத்தி, செயலி வாயிலாக ஆதார் அட்டையை சரிபார்க்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன் வாயிலாக, பாதி மறைக்கப்பட்ட ஆதார் அட்டையை மின்னணு முறையில் பகிர முடியும். ஆதாரின் 12 இலக்க எண்களுக்கு பதிலாக, அந்த அட்டையில் எட்டு எண்கள் மறைக்கப்பட்டு, கடைசி நான்கு எண்கள் மட்டுமே பகிரப்படும்.

இந்த புதிய முறை வாயிலாக, 'பயோமெட்ரிக்' எனப்படும் கைவிரல் ரேகை, கருவிழி படலம் சரிபார்க்கும் பணியை தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் ஆதார் மையத்தை பொதுமக்கள் அணுக வேண்டிய நிலை இருக்காது.

ஆதார் அட்டையில் பெயர், முகவரி உள்ளிட்ட மாற்றங்களை இனி வீட்டிலிருந்தே செய்யலாம்.

இந்த நடவடிக்கை காகிதப்பணிகளை குறைத்தல், போலி ஆவணங்களின் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் குடிமக்களுக்கு செயல்முறையை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது குறித்து உதாய் தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் கூறுகையில், ''கைரேகை, கருவிழிப்படலம் மாற்றத்தை தவிர அனைத்து விபரங்களையும் மாற்றுவதற்கு ஏதுவாக செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, ஆணையத்திடம் உள்ள 1 லட்சம் இயந்திரங்களில், 2,000 இயந்திரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

''தங்கும் விடுதிகள், ரயில் டிக்கெட் பரிசோதனை, சொத்து ஒப்பந்தம் போன்ற நடைமுறைகளில், கியூ.ஆர்., கோடு வாயிலாக ஆதார் அட்டை சரிபார்க்கப்படும். இதனால், பல மோசடிகள் தடுக்கப்படும். புதிய செயலி மற்றும் கியூ.ஆர்., கோடு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us