sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அவையின் கண்ணியத்தை பேணுவதில்லை: டி- சர்ட் அணிந்து வந்த தி.மு.க.,- எம்.பி.,க்களுக்கு சபாநாயகர் கண்டிப்பு

/

அவையின் கண்ணியத்தை பேணுவதில்லை: டி- சர்ட் அணிந்து வந்த தி.மு.க.,- எம்.பி.,க்களுக்கு சபாநாயகர் கண்டிப்பு

அவையின் கண்ணியத்தை பேணுவதில்லை: டி- சர்ட் அணிந்து வந்த தி.மு.க.,- எம்.பி.,க்களுக்கு சபாநாயகர் கண்டிப்பு

அவையின் கண்ணியத்தை பேணுவதில்லை: டி- சர்ட் அணிந்து வந்த தி.மு.க.,- எம்.பி.,க்களுக்கு சபாநாயகர் கண்டிப்பு

46


ADDED : மார் 20, 2025 05:59 PM

Google News

46

ADDED : மார் 20, 2025 05:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'சில எம்.பி.,க்கள் அவையின் கண்ணியத்தை பேணுவதில்லை. வாசகத்துடன் டி- சர்ட் அணிந்து வந்தால், இந்த அவை செயல்படாது' என தி.மு.க., எம்.பி.,க்களை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டித்தார்.

லோக்சபாவிற்கு பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசை விமர்சித்து வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்களை அணிந்து வந்திருந்தனர். சபாநாயகர் ஓம் பிர்லா அந்த எம்.பி.க்களை கண்டித்தார். அவையை ஒழுங்காக நடத்த விரும்பினால் சரியான ஆடையில் வருமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது ஓம்பிர்லா கூறியதாவது: சில எம்.பி.க்கள், அவையின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பேணுவதில்லை. டி-சர்ட் அணிவது பார்லிமென்ட் ஒழுக்கத்தை மீறுவதாகும். சபையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிய, பார்லிமென்ட்டின் விதி 349ஐ படிக்க வேண்டும்.

நீங்கள் டி-சர்ட்டை அணிந்து, அதில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தால், அவை (லோக்சபா) செயல்படாது. நீங்கள் டி-சர்ட்டைக் மாற்றி சரியான உடையில் வந்தால் மட்டுமே, அவை செயல்படும். இவ்வாறு ஓம் பிர்லா கோபத்துடன் தெரிவித்தார்.

நியாயமான எல்லை நிர்ணயம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என்ற வாசகம் அச்சிடப்பட்ட வெள்ளை நிற டி-சர்ட்களை அணிந்து லோக்சபாவிற்கு தி.மு.க., வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us