யார் சிறந்த தலைவராக இருக்க முடியும்; அமைச்சர் நிதின் கட்கரி சொல்வதை கேளுங்க!
யார் சிறந்த தலைவராக இருக்க முடியும்; அமைச்சர் நிதின் கட்கரி சொல்வதை கேளுங்க!
ADDED : செப் 01, 2025 05:30 PM

புதுடில்லி: 'மக்களை முட்டாளாக்க தெரிந்தவரே சிறந்த தலைவராக இருக்க முடியும்' என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார்.
டில்லியில் அகில பாரதிய மஹானுபவ் பரிஷத் அமைப்பின் சார்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது;
எதையும் சாதிக்க ஒரு குறுக்கு வழி உள்ளது. அந்த வழிகள் மூலம் ஒருவர் வேகமாக முன்னேறுகிறார். ஆனால் அந்த குறுக்கு வழிக்கு ஒரு அர்த்தம் உள்ளது என்று ஒரு தத்துவஞானி கூறி இருக்கிறார். அது உன்னையே குறுகிய பாதைக்கு இட்டுச் செல்கிறது என்பதுதான்.
நேர்மை, அர்ப்பணிப்பு, உண்மை ஆகியவை சமூகத்தில் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தவை. உண்மையாக இருந்தால் தான் நீண்ட கால வெற்றி கிடைக்கும். பகவத் கீதையில் கிருஷ்ணர் எழுதியது போல், இறுதியில் உண்மை எப்போதுமே வெல்லும்.
எந்த இடத்தில் வேலை செய்திருந்தாலும், மனதில் இருந்து வரும் உண்மையை பேசுவது என்பது தடை செய்யப்பட்டுள்ளது. மக்களை சிறப்பான முறையில் முட்டாளாக்கி நம்ப வைக்கும் தலைவரே வெற்றி பெறுகிறார்.
இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.