நம் ராணுவ கட்டமைப்புகளை பாகிஸ்தான் நெருங்க முடியாது! சீன ஏவுகணையை சுட்டு வீழ்த்தினோம்; முப்படை அதிகாரிகள் விரிவான விளக்கம்
நம் ராணுவ கட்டமைப்புகளை பாகிஸ்தான் நெருங்க முடியாது! சீன ஏவுகணையை சுட்டு வீழ்த்தினோம்; முப்படை அதிகாரிகள் விரிவான விளக்கம்
ADDED : மே 13, 2025 03:08 AM

புதுடில்லி:'நம்மிடம் ஆளில்லா வான்வழி எதிர்ப்பு அமைப்பு, வான் பாதுகாப்பு ஆயுதங்கள், மின்னணு போர் சாதனங்கள் உள்ளிட்ட கலவையான நவீன போர் தளவாடங்கள் இருப்பதால், பாகிஸ்தானால் நம்மை நெருங்க முடியவில்லை' என, நான்கு நாள் போர் நிலவரம் குறித்து நம் முப்படை அதிகாரிகள் நேற்று விளக்கம் அளித்தனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின், நம் முப்படை அதிகாரிகள் இரண்டாவது முறையாக நேற்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதில் பங்கேற்ற ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய், விமானப் படை நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் துணை அட்மிரல் ஏ.என்.பிரமோத் ஆகியோர் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

