
அவசரநிலை பிரகடனம் வாயிலாக காங்கிரசின் ஜனநாயக விரோத மனநிலை வெளிப்பட்டது. பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது; நீதித்துறையின் கைகள் கட்டப்பட்டன; மக்கள் எழுச்சியால் காங்., ஆட்சி அகற்றப்பட்டது. அதிகாரம், சர்வாதிகாரமாக மாறினால், அதை துாக்கி எறியும் சக்தி மக்களுக்கு உண்டு என்பதை இது உணர்த்துகிறது.
அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர்,
பா.ஜ.,
இது இந்தியாவின் நேரம்!
அடுத்த மூன்று ஆண்டுகளில், 425 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் என்ற இலக்கை அடையும் நோக்கில் பயணிக்கிறோம். 2047க்குள் வளர்ந்த நாடு என்ற பயணத்தில், இது முதல் மைல்கல். இது, இந்தியாவின் நேரம். உலகின் முன்னணி நாடுகளில், நம் நாடு சரியான இடத்திற்கு முன்னேற இத்தருணத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பியுஷ் கோயல்
மத்திய அமைச்சர், பா.ஜ.,
முதல்வரின் அறியாமை!
பா.ஜ.,வைச் சேர்ந்த ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவை பதவி நீக்கம் செய்ய சதித்திட்டம் தீட்டப்படுகிறது. மாநில தலைவர்கள் மற்றும் டில்லி மேலிடத்தில் அவருக்கு எதிராக அவரது கட்சியினர் செயல்படுகின்றனர். இதைப்பற்றி நாங்கள் எடுத்துரைத்தாலும், பஜன்லால் சர்மா அறியாமையுடன் வலம் வருகிறார்.
அசோக் கெலாட்
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர், காங்கிரஸ்