ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க பைஜூஸ் நிறுவனத்திற்கு தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் உத்தரவு
ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க பைஜூஸ் நிறுவனத்திற்கு தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் உத்தரவு
UPDATED : ஜூலை 05, 2024 09:34 AM
ADDED : ஜூலை 05, 2024 09:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்தியாவின் புகழ்பெற்ற கல்விசார் நிறுவனமான பைஜூஸ் நிறுவன ஊழியர்களுக்கு நிலுவையில் இருக்கும் சம்பள பாக்கியை உடனடியாக வழங்குமாறு என்சிஎல்டி உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது பைஜூஸ். பல ஆயிரம் கோடி கடனில் தத்தளித்தது. திடீரென சரிவை சந்தித்த இந்நிறுவன ஊழியர்களுக்கு சம்பள பாக்கி வைக்கப்பட்டது. வழங்க கால தாமதம் செய்து வருகிறது.
இது தொடர்பாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் விசாரித்தது. சம்பள பாக்கியை வழங்காவிட்டால் இந்திய மத்திய கணக்காயத்தின் தணிக்கைக்கு உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முடிவெடுக்க 48 மணி நேரம் அவகாசம் கேட்ட நிலையில், விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு என்சிஎல்டி ஒத்திவைத்தது.