கொலை செய்யும் போது நேரில் பார்த்தேன்: தேனிலவுக்கு அழைத்து சென்று கதையை முடித்த மனைவி 'பகீர்'
கொலை செய்யும் போது நேரில் பார்த்தேன்: தேனிலவுக்கு அழைத்து சென்று கதையை முடித்த மனைவி 'பகீர்'
UPDATED : ஜூன் 11, 2025 07:14 AM
ADDED : ஜூன் 11, 2025 07:13 AM

புதுடில்லி: ''மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது, கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்தேன். கொலை செய்த போது நேரில் பார்த்தேன்'' என இந்துாரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியின் மனைவி சோனம் தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தின் இந்துாரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி, 30. இவருக்கும், சோனம், 24, என்பவருக்கும், கடந்த மாதம் 10ம் தேதி திருமணம் நடந்தது. இதைஅடுத்து, இருவரும் தேனிலவுக்காக வடகிழக்கு மாநிலமான மேகாலயா சென்றனர். பின்னர் தேனிலவுக்கு சென்ற தம்பதி மாயமானதை அடுத்து, அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
ராஜாவைக் கொன்றுவிட்டு மர்மநபர்கள், சோனமை கடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. சோனம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த கொலை சம்பவத்தில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ததை, குற்றவாளிகள் ஒப்புக்கொண்டார்.
''மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது, கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்தேன். கொலை செய்த போது நேரில் பார்த்தேன்'' என மனைவி சோனம் தெரிவித்தார். இது குறித்து ஏ.சி.பி., யாதவ் கூறியதாவது: ராஜா ரகுவன்ஷி தாக்கப்பட்டபோது சோனம் சம்பவ இடத்திலேயே இருந்துள்ளார். அவர் கொலை செய்யப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ராஜா ரகுவன்ஷியைக் கொன்றதாக நான்கு குற்றவாளிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். முதல் அடியை விக்கி தாக்கூர் என்கிற விஷால் அடித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் விஷால், ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகிய மூவரும் இந்தூரிலிருந்து ரயிலில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் மேகாலயாவை அடைய பல ரயில்களை மாற்றிக் கொண்டனர்.
மூவரின் பயணச் செலவுகளுக்காக தலா ரூ.40,000-50,000 கொடுத்து நிதி உதவி செய்தேன். கொலைக்குப் பிறகு சோனம் மேகாலயாவில் தங்கிவிட்டாரா அல்லது இந்தூருக்குத் திரும்பினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்த விவரம் மேகாலயா காவல்துறையால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.